தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் அவ்வப்போது மழை: வெள்ளைப்பூண்டு வேளாண்மை பாதிப்பு - Impact of rain on garlic farming

கொடைக்கானலில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் வெள்ளைப்பூண்டு வேளாண்மை பாதிப்படைந்துள்ளது. இதனால் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வெள்ளைப்பூண்டு வேளாண்மை பாதிப்பு
வெள்ளைப்பூண்டு வேளாண்மை பாதிப்பு

By

Published : Aug 3, 2021, 9:33 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் வேளாண்மையே பிரதான தொழிலாக இருந்துவருகிறது. தற்போது அதிக அளவில் உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, கேரட் உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாகப் பகலில் வெயிலும் அவ்வப்போது சாரல் மழையும் பெய்துவந்தது. இதனால் அங்கு வேளாண்மை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில் வெள்ளைப்பூண்டு வேளாண்மை செய்துவரும் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வெள்ளைப்பூண்டு வேளாண்மை பாதிப்பு

மழையால் பூண்டு வேளாண்மையே குறைந்துள்ளதாகவும், விலையும் குறைந்து விற்பனையாவதாகவும் மலைவாழ் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனக் கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: 'முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவை காப்பாற்றவும்' - ராமதாஸ் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details