கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சுற்றுலாத் தலமான கொடைக்கானல் பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி சுற்றுச்சூழல் மாசு குறைந்து காணப்படுகிறது. இந்தச் சூழலில் கோடை காலம் தொடங்கிவிட்டதால், அப்பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது லேசான சாரல் மழையும் பெய்துள்ளது.
அதேபோல் அங்குள்ள மேல்மலை, மன்னவனூர் கிராமத்தில் இன்று ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் வெப்பம் தனிந்து, குளிர்ச்சி நிலவி, பனி பிரதேசம் போல் காட்சியளித்தது.