திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகக் கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். பெரும்பாலும் பகல் பொழுதுகளில் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்த்து வந்தனர். அதிலும் சிலர், வெளியில் வந்தாலும் குடையோடு வந்து சென்றனர்.
திண்டுக்கல்லில் திடீர் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி - dindigul news
திண்டுக்கல்: கடந்த இரண்டு வார காலமாகக் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று பெய்த திடீர் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
rain
இதனிடையே நேற்று காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, சின்னாளப்பட்டி, வேடசந்தூர், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.