தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் ரயில் மறியல்! - ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் ரயில் மறியல்

திண்டுக்கல் : ஆமை வேகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்துமுடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

railwaygate block protest cpm balabharathi

By

Published : Oct 12, 2019, 9:29 AM IST

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் சென்னை, பெங்களூரு, பாலக்காடு செல்கின்ற மூன்று ரயில் தண்டவாளங்களும் ஒரே இடத்தில் செல்வதால் பாலகிருஷ்ணா புரதத்தை அடுத்துள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்தது.

மேலும் மேம்பாலப் பணிக்காக தனியாருக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் முடிவடையவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை தமிழ்நாடு அரசு, ரயில்வே துறை, மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி தலைமையில் அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்துமுடிக்க வலியுறுத்தி ரயில் மறியல்

மேலும், தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாலபாரதி உள்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் திருநெல்வேலியிலிருந்து மயிலாடுதுறை செல்லக்கூடிய பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் காலதாமதமாகச் சென்றது.

இதையும் படிங்க :

சாதியைக் காரணம் காட்டி விட்டுச்சென்ற கணவர் - நடவடிக்கை எடுக்க மனு அளித்த இளம்பெண்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details