தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் அக்.2 வரை தேஜஸ் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவு

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அக்.2 வரை தேஜஸ் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அக்.2 வரை தேஜஸ் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவு
அக்.2 வரை தேஜஸ் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவு

By

Published : Apr 3, 2021, 6:45 AM IST

சென்னை - மதுரை இடையே மிகக் குறைந்த நிறுத்தங்களுடன் அதிவேகமாக செல்லும் தேஜஸ் ரயிலில் பயணிகள் ஆர்வத்துடன் பயணிக்கின்றனர்.

சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15க்கு மதுரை சென்று அடைகிறது. மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15க்கு சென்னை வந்தடைகிறது.

இதுவரை திருச்சிக்கு அடுத்தபடியாக கொடைரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு வந்த தேஜஸ் ரயில், திண்டுக்கல் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கொடை ரோடு ரயில் நிலையத்திற்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் சோதனை ஓட்டமாக தேஜஸ் ரயில் அக்.2 வரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஏப். 2) திண்டுக்கல் வந்தடைந்த தேஜஸ் ரயிலுக்கு ரயில்வே தொழிலாளர்கள், வர்த்தகர் சங்க உறுப்பினர்கள், லயன்ஸ் கிளப் சார்பில் மலர்த்தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details