அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல்காந்தி பிறந்தநாள் விழா இன்று (ஜூன்.19) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்தவகையில், திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அதன் பின்னர், கரோனா நிவாரணப்பொருட்களை 250 பேருக்கு வழங்கினர்.
ராகுல் காந்தி பிறந்தநாள்:கரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் - கரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்
திண்டுக்கல்: ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர்.
Congress
திண்டுக்கல் மாவட்ட மாநகர் காங்கிரஸ் தலைவர் மணி கண்டன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னாள் சிறுபான்மையினர் துறை துணைத் தலைவர் சித்திக், சுதந்திர போராட்ட தியாகி ராமு ராமசாமி, விவசாய அணி தலைவர் மணிகண்டன், மகிளா காங்கிரஸ் தலைவர் ரோஜா பேகம், நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கும் ராகுல் - உதயநிதி வாழ்த்து