திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முயல்களை வேட்டையாடிக் கொண்டிருந்த சத்திரப்பட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், பெரியகுளிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ், வடகாடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகைவேல், வண்டிப்பாதையைச் சேர்ந்த சேகர் ஆகிய நான்கு பேரையும் வனத்துறையினர் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
முயல்வேட்டை: நான்கு பேர் கைது - வேட்டை
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் கை துப்பாக்கியுடன் முயல் வேட்டையாடிய நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
arrest
மேலும் அவர்கள் வேட்டைக்காக பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், வெடி மருந்துகள் மற்றும் வேட்டையாடிய முயல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உயிருடன் இருந்த ஒரு முயலை மீட்டு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.