தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குவாரி விதிமீறல்: தட்டிக்கேட்ட நபரைத் தாக்கிய குவாரி உரிமையாளர்!

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே சட்டத்திற்குப் புறம்பாக அரசு பொதுப்பாதையில் சுண்ணாம்புக் கற்களைக் கடத்தியவரை தட்டிக்கேட்ட நபரை, கிரானைட் குவாரி உரிமையாளர் தாக்கினார்.

குவாரி விதிமீறல்கள்: தட்டிக்கேட்ட நபரைத் தாக்கிய குவாரி உரிமையாளர்!
குவாரி விதிமீறல்கள்: தட்டிக்கேட்ட நபரைத் தாக்கிய குவாரி உரிமையாளர்!

By

Published : Apr 28, 2021, 8:48 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை தாலுகா சத்திரப்பட்டி என்னும் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர்.

இந்தக் கிராமத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியை கடந்துசெல்ல வேண்டும். இந்நிலையில் இங்கு சட்டத்திற்குப் புறம்பாக வெடிவைத்து கற்களை எடுப்பதால் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனேயே சென்றுவருகின்றனர்.

இந்நிலையில் சட்டத்திற்குப் புறம்பாக சுண்ணாம்புக் கற்களை எடுத்துவந்த கிரானைட் குவாரி உரிமையாளர் பொதுமக்கள் செல்லும் பொதுப் பாதையில் சுண்ணாம்புக் கற்களை வெட்டி கடத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதியின் வார்டு உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

அதன்பின் தட்டிக்கேட்க கல்குவாரிக்குச் சென்ற வார்டு உறுப்பினரின் கணவரை, குவாரியின் உரிமையாளர் கணேசமூர்த்தி கண்மூடித்தனமாகத் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

மேலும் இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ABOUT THE AUTHOR

...view details