திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பட்டியகாடு என்ற ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இங்கு அதிமுகவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் பழனி சட்டப்பேரவைத் தொகுதிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் குமார் பட்டியகாடு பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார்.
அப்போது மரியாதை நிமித்தமாக திமுக வேட்பாளர் செந்தில் குமாருக்கு சால்வை அணிவிக்க, ஆனந்தனை திமுகவினர் வற்புறுத்தினர்.