தமிழ்நாட்டில் தற்போது கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை செய்து கொண்டும் கரோனா தடுப்பூசி போட்டும் வருகின்றன.
அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இல்லாமல் பொதுமக்கள் காத்திருப்பு! - கரோனா தடுப்பூசி இல்லாமல் பொதுமக்கள் காத்திருப்பு
திண்டுக்கல்: சின்னாளப்பட்டி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இல்லாமல் பொதுமக்கள் வெகு நேரம் காத்திருந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வதற்காக இன்று (மே 6) காலை 8 மணி முதல் வந்த பொதுமக்கள் தடுப்பூசி இல்லாத காரணத்தினால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். அரசு மருத்துவர்களிடம் கேட்கும்பொழுது தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடும் என கூறினர்.
நாளொன்றுக்கு 100-முதல் 150-பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள கின்றனர். மேலும், டோக்கன் வழங்கப்பட்டு ஊசி செலுத்தி வருகின்றனர். உடனடியாக அரசு தடுப்பூசிகளை அரசு தாமதமின்றி மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.