திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய பகுதியாக பாம்பார்புரம் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பாம்பார்புரம் பகுதிக்கு செல்லக் கூடிய முக்கிய சாலையாக அப்பர்லேக் வியூ சாலை அமைந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் சென்று வரக்கூடிய பிரதான சாலையாகவும் அப்பர் லேக் வியூ இருந்து வருகிறது. இந்தச் சாலை மிகவும் குறுகிய இடத்தில் இருப்பதால், விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.