திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய பகுதியாக நட்சத்திர ஏரி அமைந்துள்ளது . சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடும் பகுதியாகவும் இந்த ஏரி இருந்து வருகிறது . மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி மேற்கொள்வது வழக்கம்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது படகு சவாரிக்கு தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக ஏரிக்குள் ராட்சச மரங்கள் சாய்ந்து விழுந்தது. தற்போது வரை ஏரிக்குள் விழுந்த மரங்கள் அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதி முழுவதும் கலை செடிகள் முளைத்து வருகிறாது.