தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை திறக்க பொதும‌க்க‌ள் கோரிக்கை! - Tourist sites under forest control

கொடைக்கான‌லில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை திறந்து சுற்றுலாவை மேம்ப‌டுத்த‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

tourist places
tourist places

By

Published : Dec 26, 2020, 9:58 PM IST

திண்டுக்கல்:கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு ஆண்டு தோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். கரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் எட்டு மாதங்களாக சுற்றுலாப்பயணிகளின் வருகைக்கு தடை நீடித்து வந்தது.

தமிழ்நாடு‌ அர‌சு பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவித்த‌ பிறகு சில சுற்றுலா தலங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் வந்து ஒரே நாள் திரும்பும் நிலையும் உள்ளது. மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி, மதிகெட்டான் சோலை, கரடி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களை திறந்தால் மட்டுமே சுற்றுலாப்பயணிகள் இங்குவந்து தங்கிச் செல்வார்கள்.

சுற்றுலா தலங்களை திறக்க பொதும‌க்க‌ள் கோரிக்கை

பேரிஜ‌ம் ஏரிக்கு சுமார் 20 கிமீ தொலைவு வ‌ன‌ப்ப‌குதியின் உள்ளே செல்ல‌ வேண்டும். இங்கு செல்லும் வ‌ழியில் வ‌ன‌வில‌ங்குக‌ள் ஆகிய‌வ‌ற்றை க‌ண்டு க‌ளிக்க‌லாம். மேலும் இது அட‌ர்ந்த‌ வ‌ன‌ப்ப‌குதி என்ப‌தால் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளை விய‌ப்பில் ஆழ்த்தும்.

இந்தச் சுற்றுலா இடங்களை திறந்தால் மட்டுமே முடங்கி இருக்கும் சுற்றுலாவை மேம்ப‌டுத்தி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்க முடியும். எனவே அனைத்து சுற்றுலா இடங்களையும் திறக்க வேண்டுமென பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்த லாரி - இருவர் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details