திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டார கல்வி அலுவலகமானது, வத்தலகுண்டு பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் பழுதடைந்து காணப்படுவதால் மழை நேரங்களில், அலுவலகத்தின் உள்ளே மழை நீர் புகுந்து ஆவணங்கள் சேதமடையும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
வட்டராக கல்வி அலுவலகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை! - பாழடைந்து கிடக்கும் அலுவலகம்
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே சேதமடைந்து காணப்படும் வட்டார கல்வி அலுவலகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![வட்டராக கல்வி அலுவலகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை! Public demand to maintain the education office as a dilapidated area!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:51:13:1597227673-tn-dgl-01-kodaikanal-educationoffice-vis-7204945-12082020145505-1208f-1597224305-264.jpg)
Public demand to maintain the education office as a dilapidated area!
அதிலும் தற்போது கொடைக்கானல் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், வட்டார கல்வி அலுவலகத்தின் மேற்புறம் பிளாஸ்டிக் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தைச் சுற்றிலும் புதர்கள் மண்டி, பராமரிக்கப்படாமலும் உள்ளது.
இதனால் வட்டார கல்வி அலுவலகத்தை தேடி வரும் மக்கள், அதன் தோற்றத்தை கண்டு அதிர்ச்சியடைக்கின்றனர். எனவே, பழுதடைந்து காணப்படும் வட்டார கல்வி அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.