திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய பகுதியான பழைய அப்பர் லேக் வியூ சாலையில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால், அதை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
கொடைக்கானலில் சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை!
திண்டுக்கல்: கொடைக்கானலில் முடிக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, கொடைக்கானல் நகராட்சி அலுவலகர்கள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல லட்சம் ரூபாய் செலவில் துவங்கிய இந்த பணியில், 100 அடி தூரம் வரை மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாலை முழுமை அடையாததால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, முடிக்கப்படாமல் உள்ள சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலை பணி முழுமையாகும் பட்சத்தில், சீசன் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.