தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ளன.
அதனடிப்படையில், திண்டுக்கல்லில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல கட்டுமான பணிகளுக்குத் தேவையான பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளான சிமெண்ட், ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக் கடைகள், மின் சாதன பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் காலை 9 மணியிலிருந்து 2 மணிவரை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.