தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’குடிநீர் முறையாக வழங்க வேண்டும்’ - காலி குடங்களுடன் மனு அளித்த கிராம மக்கள்! - water is not provided properly in dindigul

திண்டுக்கல்: அம்பாத்துரை ஊராட்சிக்குட்பட்ட அமலிநகர் கிராம மக்கள் முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Public asking for water in Dindigul, தண்ணீர் முறையாக வழங்கவில்லையெனில் சாலைமறியலில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் உறுதி

By

Published : Nov 11, 2019, 10:11 PM IST


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது அம்பாத்துரை ஊராட்சிக்குட்பட்ட அமலிநகர் கிராம மக்கள், முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் மனு அளிக்க வந்தனர்.


இது குறித்து பேசிய கிராம மக்கள், ”எங்கள் பகுதியில் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து முன்னதாகவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

Public asking for water in Dindigul, தண்ணீர் முறையாக வழங்கவில்லையெனில் சாலைமறியலில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் உறுதி

எங்கள் பகுதியில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மாவட்ட ஆட்சியர் குடிநீரை முறையாக வழங்கிட உத்தரவிடவேண்டும். இல்லையெனில் சாலை மறியலில் ஈடுபடுவோம்” என்றனர்.
இதையும் படிங்க: முழு கிராமத்தின் குடிநீரையும் சேர்த்து உறிஞ்சும் தனிநபர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details