தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5,6ஆம் தேதிகளில் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்தும், 6ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டமும் அறிவித்திருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் தனிமனித இடைவெளியுடன் கூடிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய் அலுவலர்களுக்கு உயர்தர பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி போராட்டம்! - வருவாய்த்துறையினர்
திண்டுக்கல்: கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, உயர் தர தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது.
இதில், ' தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்புப் பணியில் வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் எனவும்; ஆனால், எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை' எனவும் தெரிவித்தனர்.
மேலும் இதன் விளைவாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, திருச்சி சேகர், தஞ்சாவூர் ராஜகோபால், திருவாரூர் கண்ணப்பன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் உயிரிழந்தனர் எனவும்; இவர்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 50 லட்சம் இழப்பீடு தாமதமின்றி வழங்க வேண்டும் எனவும்; தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் வருவாய்த் துறை அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, உயர்தர தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர்.