தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 நாள் வேலை வழங்க வேண்டும் : பேரூராட்சிகளில் ஆர்ப்பாட்டம் - அகில இந்திய தொழிலாளா்கள் சங்கம்

திண்டுக்கல் : கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக 100 நாள் வேலை வழங்கப்படாததைக் கண்டித்து பேரூராட்சிகளில் மனு அளிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Protest for 100 Days work in Dindigul Municipality
Protest for 100 Days work in Dindigul Municipality

By

Published : Oct 9, 2020, 9:42 PM IST

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அதிக கிராமங்கள் உள்ளன. இங்கு, மக்கள் பெரும்பாலும் விவசாய வேலை மற்றும் 100 நாள் வேலையையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நத்தம் தாலுகாவிலுள்ள பேரூராட்சியில்,நூறு நாள் வேலைவாய்ப்பு வழங்கிட வலியுறுத்தி, அகில இந்தியத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் இன்று (அக்.09) மனுக்கள் அளித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஊராட்சிப் பகுதிகளைப் போன்று பேரூராட்சிப் பகுதி மக்களுக்கும் 100 நாள் வேலையை வழங்க வலியுறுத்தி, ஏற்கனவே பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் பேரூராட்சிப் பகுதி மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பை வழங்க வலியுறுத்தி, அகில இந்தியத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மனு அளிக்கும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:9 மாதமாக நடைபெற்றுவரும் மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சுவர் பணிகள்...!

ABOUT THE AUTHOR

...view details