திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கிழக்கு மாரம்பாடியைச் சேர்ந்தவர் அந்தோணி (45). இவர் அதேப் பகுதியில் தனது அண்ணன் தங்கராஜ் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்துவருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அந்தோணி தனது குடும்பத்தினரோடு தகராறில் ஈடுபட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் சென்றுள்ளார்.
திண்டுக்கல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சரக்கு வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அந்தோணியை வழிமறித்து தாக்கி பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.