தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துவரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் செல்லாண்டிய அம்மன் கோவில் தெரு, நாராயணபிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் அன்றாடம் வேலைக்குச் சென்று குடும்பம் நடத்தும் மக்களே அதிக அளவில் வசித்துவருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர்.
மேலும், இந்த ஊரடங்கு காரணமாக வேலையிழந்து கடந்த 15 தினங்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் உணவிற்கே சிரமப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.