தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 நாள்களுக்கு முன்பு தப்பி ஓடிய கைதி கைது - prisoner arrest

பழனி அரசு மருத்துவமனையில் காவல் துறையினரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த கைதி நான்கு நாட்களுக்கு முன்னதாக தப்பியோடிய நிலையில், நேற்று (ஜூலை 27) கைது செய்யப்பட்டார்

தப்பிய கைதி கைது  பழனியில் தப்பிய கைதி கைது  திண்டுக்கல் பழனியில் தப்பிய கைதி கைது  திண்டுக்கல் செய்திகள்  கைதி  dindigul news  dindigul latest news  prisoner was arrested yesterday after fleeing four days ago  prisoner was arrested yesterday after fleeing four days ago in dindigul  prisoner arrest  prisoner
தப்பிய கைதி

By

Published : Jul 28, 2021, 11:27 AM IST

திண்டுக்கல்: பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தத்திற்கும், துர்க்கை வேலு என்பவருக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பேருந்துநிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் தகராறு ஏற்பட்டது.

அதில் துர்க்கைவேலுவை ஜீவானந்தம் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து துர்க்கைவேலு கொடுத்த புகாரின்பேரில் பழனி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜீவானந்தத்தை தேடிவந்தனர்.

இந்நிலையில் ஜீவானந்தத்தை பிடிக்க சென்றபோது காவல் துறையினரை பார்த்ததும் ஜீவானந்தம் ஓட முயன்றுள்ளார். அப்போது காவல் துறையினர் அவரை துரத்தி பிடிக்க முயன்றதில், ஜீவானந்தம் கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டது.

தப்பிய கைதி கைது...

இதனையடுத்து ஜீவானந்தத்தை கைது செய்த காவல் துறையினர், பழனி அரசு மருத்துவமனையில் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நான்கு நாள்களுக்கு முன்பு இரண்டுகாவலர்களின் பாதுகாப்பில் இருந்த கைதி ஜீவானந்தம், காவலர்களின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் , பழனி நகர ஆய்வாளர் பாலமுருகன் தலைமயிலான காவல் துறையினர் நேற்று (ஜூலை 27) கொடைக்கானல் சாலையில் ஜீவானந்ததை கைது செய்தனர்.

இதையும் படிங்க: பாலியல் தொழில் பணத் தகராறில் வட மாநில இளைஞர் கொலை - 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details