திண்டுக்கல்: நாககோனூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் ராதா ராணி, விரியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை உடன், திருமணத்தை மீறிய உறவில் இருப்பதைப் பார்த்த பள்ளி மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேடசந்தூர் கல்வி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமியிடம் மனு கொடுப்பதற்காக வந்துள்ளனர்.