தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணிகள் மும்முரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு அரிசி பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொரி தயாரிக்கும் பணிகள் மும்முரம்
பொரி தயாரிக்கும் பணிகள் மும்முரம்

By

Published : Oct 13, 2021, 8:14 PM IST

திண்டுக்கல்மாவட்டத்தைப் பொறுத்தவரை 10-க்கும் மேற்பட்ட அரிசி பொரி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. தற்போது ஆயுத பூஜை நாளை (அக்.14) கொண்டாடப்படுவதால், திண்டுக்கல் பகுதியில் தற்போது பொரி தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தென் தமிழ்நாட்டில் பொரி தயாரிப்பில் திண்டுக்கல் நகருக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பொரியை பல்வேறு மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொரியானது, இனிப்பு கலந்த சுவையோடு மொறு மொறு தன்மையுடன் இருக்கும்.

திண்டுக்கல்லில் தயாராகும் பொரியை தென் தமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, நாகர்கோவில், கேரளா உள்ளிட்டப் பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து பொரியை வாங்கிச் செல்கின்றனர்.

பொரி தயாரிப்பு

இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த பொரி தயாரிக்கும் உரிமையாளர் மகாராஜன் கூறுகையில், 'பண்டிகை காலங்களில் பொரியின் தேவை அதிகமாக இருப்பதால், தற்போது முழு வீச்சில் பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்தப் பொரி தயாரிப்புக்கான மூலதனப் பொருளான நெல் தரமானதாகத் தேர்வு செய்யப்பட்டு, அதில் சீனி, உப்பு கலந்து தண்ணீரில் சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

அதன் பின்னர் சரியான தட்பவெட்பநிலையில், அதனைக் காய போட வேண்டும். அவ்வாறு காய போட்டு உலர்த்திய பின்னர், அந்த உலர்ந்த நெல்லை எடுத்துப் பொரி தயாரிக்கும் இயந்திரத்தில், கொட்டி நெருப்பு மூலம் வேகவைத்து பின்னர் பொரியாக, இயந்திரம் மூலம் வெளியே வருகிறது.

கரோனாவால் பாதிக்கும் வியாபாரம்

விறகுகள் மூலம் நெருப்பு மூட்டப்படுவதால், அந்த பொரியின் மனமும், சுவையும் மாறாமல் அப்படியே இருக்கும்.
தற்போது ஆயுத பூஜை விழா நெருங்கி வருவதையொட்டி, கடந்த 20 நாள்களாக பொரி தயாரிப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால், தற்போது கரோனா காலகட்டம் என்பதால், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொரி வியாபாரம் குறைந்து காணப்பட்டது. தற்போது ஆயிரம் முட்டை உற்பத்தி செய்தால் 600 மூடை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

பொரி தயாரிக்கும் பணிகள் மும்முரம்

மழைக்காலம் என்பதால், ஒரு நாள் அரிசியைக் காயவைக்க இரண்டு நாள் வரை தேவைப்படுகிறது. இதனால் எரிபொருள் செலவு அதிகமாகிறது.

தயாரிப்பு செலவும் கூடுதலாகிறது. கடந்தாண்டு ஆயுதபூஜைக்கு 100 லிட்டர் கொண்ட ஒரு மூடை 325 ரூபாய் முதல் 330 வரை விற்பனையானது. ஆனால், இந்தாண்டு ஆயுத பூஜை கரோனா ‌ காலகட்டம் என்பதால் ரூ. 350 முதல் 400 வரை விற்கும் என எதிர்பார்க்கிறேன்' என்றார்.

இதையும் படிங்க:நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் ஒரே நாளில் 200 டன் பூக்கள் விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details