வேடசந்தூர் வசந்த் நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(26). இவரது மனைவி சுஷ்மிதா(19). ஒரே தனியார் ஆலையில் வேலை பார்த்துவந்த இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். சுஷ்மிதா தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார்.
தினேஷ்குமார் தனது மனைவியைக் காணவில்லை என்று தேடிவந்த நிலையில் நேற்று கவுண்டச்சிபட்டி சாலையில் இறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். மனைவி கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மாயமானதால் நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என காவல் நிலையத்தில் தினேஷ்குமார் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் வேடசந்தூர் காவல் துரையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காவல் துறையினரின் விசாரணையில் திடீர் திருப்பமாக அவரது கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.
வேடசந்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தினேஷ்குமாருக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த விபரம் நான்கு மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கணவரை அவர் கண்டித்துள்ளார்.
சாலையோரம் கிடந்த நிறைமாத கர்ப்பிணியின் சடலம் இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் வேலைக்குச் செல்வது போல் சென்று தனது மனைவியை தனியாக தோட்டத்துக்கு அழைத்து வந்து அவரை கொலை செய்துள்ளார். பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கழுத்தில் இருந்த நகைளை மட்டும் எடுத்து தனது பெண் தோழியின் வீட்டில் பதுக்கி வைத்ததை காவல் துறையினரின் விசாரணையில் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மைனர் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியவர் போக்சோ சட்டத்தில் கைது