மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களை சந்தித்தார்.
நோட்டாவோடு போட்டிபோடும் பாஜகவை வீழ்த்துவது கடினமல்ல: பிரகாஷ் காரத் - நோட்டா
திண்டுக்கல்: தமிழகத்தில் நோட்டாவோடு போட்டிபோடும் பாஜகவை வீழ்த்துவது கடினமல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் விமர்சித்துள்ளார்.

prakash karat
அப்போது, தமிழகத் தேர்தல்களில் எல்லாம் பாஜக பிற கட்சிகளுடன் போட்டியிடாமல் நோட்டாவுடன்தான் போட்டியிட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை திமுக தலைமையிலான கூட்டணி வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் மக்களவைத் தேர்தல் யார் ஆட்சியமைப்பது என்பதை மட்டும் நிர்ணயிப்பதல்ல, இந்தியாவின் எதிர்காலம் எது என்பதை இதுவே தீர்மானிக்க உள்ளது என தெரிவித்தார்.
Last Updated : Mar 13, 2019, 1:54 PM IST