தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தில் கிடந்த ரூ.10,000 - காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர் - திண்டுக்கல் செய்திகள்

திண்டுக்கல்லில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.10,000 பணத்தை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

காவலருக்கு பாராட்டு
காவலருக்கு பாராட்டு

By

Published : Jul 18, 2021, 8:09 AM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பார்த்தசாரதி, நேற்று (ஜூலை 18) பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது பணம் எடுக்கும் இயந்திரத்தில் ரூ.10,000 கேட்பாரற்று இருந்துள்ளது. அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாத நிலையில் பணத்தை எடுத்த பார்த்தசாரதி திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், செயல்பட்டு வரும் தனிப்பிரிவு காவலரிடம் பணத்தை ஒப்படைத்துள்ளார்.

நேர்மையாக பணத்தை ஒப்படைத்த காவலர் பார்த்தசாரதிக்கு காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் திராவிட கட்சிகள்'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details