தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அமைச்சர்கள் புகைப்படத்துடன் திமுக சார்பில் சர்ச்சை போஸ்டர்.. பழனியில் பரபரப்பு!

தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டிக்கும் விதமாக மத்திய அமைச்சர்கள் மீது இருக்கும் வழக்குகள் குறித்தும், அதன் விவரங்கள் குறித்தும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

palani
பழனியில் பரபரப்பு

By

Published : Jul 8, 2023, 2:41 PM IST

திண்டுக்கல்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கும், முதலைமச்சர் மு.க ஸ்டாலினுக்கும் இடையில் வார்த்தைப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே திமுக தலைமையிலான அரசை ஆளுநர் ரவி மறைமுகமாக விமர்சித்து வந்தார். இதற்கு ஆளுநருக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்பது உள்பட திமுக பிரமுகர்களால் பல்வேறு குற்றச்சாடுகளுக்கு உள்ளானார்.

பழனியில் அமைச்சர்களின் வழக்குகள் அடங்கிய போஸ்டர்கள்

இதனிடையே செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து தொடர முடியாது என ஆளுநர் பிறப்பித்த உத்தரவால் தமிழ்நாடு அரசியல் களம் மேலும் சூடு பிடித்தது. இதனால் ஆளுநர் மத்திய அரசின் அரசியல் ஆலோசகராக செயல்படுகிறார் என பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும், ஜூன் 14ல் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் வகித்த இலாகாக்களை மற்ற அமைச்சர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட்டன. இதற்கு ஓப்புதல் அளித்த ஆளுநர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து தொடர முடியாது என தெரிவித்தார்.

இதனால் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டிக்கும் விதமாக மத்திய அமைச்சர்கள் மீது இருக்கின்ற வழக்குகள் குறித்தும், விவரங்கள் குறித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் ஆர்.என் ரவியே எங்கள் அமைச்சரே நீக்க நீங்கள் யார் ? என்று ஒருமையில் டெல்லிக்கு செல் இவர்களை மந்திரி பதிவிலிருந்து உடனடியாக நீக்கம் செய்ய சொல் என்றும் ஓட்டபட்ட போஸ்டர்களால் பரபரப்பு சூழல் காணப்படுகிறது.

மேலும், மத்திய அமைச்சர்கள் ஸ்ரீநிதி பிரமாணிக் மீது 11 வழக்குகளும், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஜான் பார்லர் மீது 9 வழக்குகளும், வெளியுறத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மீது 7 வழக்குகளும், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மீது 6 வழக்குகளும், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மீது 5 வழக்குகளும், சுகாதாரத் துறை இணை அமைச்சர் சத்தியபால் சிங் பாகேல் மீது 5 வழக்குகளும் , சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ,உணவு பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே மீது 3 வழக்குகளும் உள்துறை இணையமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மீது 1 வழக்கும் உள்ளது. இதனை தொடர்ந்து அமைச்சர்களின் பட்டியல் மற்றும் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் பழனி பேருந்து நிலையம் , அரசு மருத்துவமனை வட்டாட்சியர் வளாகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன இது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:RN Ravi: டெல்லி சென்றடைந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. திமுக வார்த்தைப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

ABOUT THE AUTHOR

...view details