தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்துறை அருகே 6 கிலோ வெடிமருந்து பறிமுதல் - ammunition Seized

திண்டுக்கல்: செந்துறை அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வெடிமருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.

Police Seizure of 6 kg of ammunition
Police Seizure of 6 kg of ammunition

By

Published : Oct 17, 2020, 10:20 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் செந்துறை அருகே சிலுவன்குறையூரைச் சேர்ந்தவர் முருகேசன்(45). இவர் உரிய அனுமதியின்றி தனது தோட்டத்துப் பகுதியில் வெடி பொருள்கள் தயாரித்துள்ளார்.

திருவிழா காலங்களில் வெடி தயார் செய்து உள்ளூரில் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அதிகளவில் வெடி தயார் செய்து விற்பனை செய்து வந்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி உள்ளிட்ட காவலர்கள் முருகேசனின் தோட்டத்தைச் சோதனை செய்தனர்.

அதில் 6 கிலோ கரிமருந்து, திரி, 600 வெடிகள் உள்ளிட்ட பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகேசனைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கஞ்சா வாங்க பணம் தராததால் இருவரை வெட்டிய 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details