திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஹரிஹரன். இவர் கரோனா காலத்தில் தனது எண்ணங்களில் தோன்றியவற்றை, 100-க்கும் மேற்பட்ட ஓவியங்களாக வரைந்துள்ளார். பின்னர் இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஓவியங்கள் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றது.
ஹரிஹரனின் ஓவியத் திறமையைக் கண்ட தன்னாா்வலர் பால்தாமஸ், இது குறித்து தெற்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளர் அபுதல்ஹாரிடம் எடுத்துக் கூறியுள்ளார். உடனடியாக இளைஞர் ஹரிஹரனை நேரில் அழைத்த ஆய்வாளர், கரோனா விழிப்புணர்வு தொடர்பான ஓவியம் வரைய வாய்ப்பு வழங்கியுள்ளார்.