திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய பகுதியாக நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல் துறையினர் மூலம் முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு இனிப்பு வழங்கிய காவல் துறையினர்! - கொடைக்கானல்
திண்டுக்கல்: கொடைக்கானலில் காவல் துறையினர் சார்பில் முகக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் மற்றும் சாலையில் வருபவர்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டன.
முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு இனிப்பு வழங்கிய காவல்துறையினர்
இந்நிலையில் ஏரிச்சாலையில் கொடைக்கானல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஸ் ராஜா மற்றும் காவலர்கள் சிலர் முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினர். மேலும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று 8,449 பேருக்கு கரோனா!