கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உறைந்துள்ளன. இதனை தடுக்கும் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்களிடையே பரவுவதை தடுப்பதற்காக தனிமைப்படுத்துதல் அவசியம் என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் பல இடங்களில் தடை உத்தரவை மீறி மக்கள் தங்களது வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.
திண்டுக்கல் நகர் பகுதிகள் மற்றும் காய்கறி சந்தைக்கு இன்று காலை முதல் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிக அளவில் பொதுமக்கள் சென்று வந்தனர். இந்நிலையில் வெளியே வரும் நபர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் நகரப் பகுதிகளில் வாகனங்களில் வந்த நபர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.