திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வேடசந்தூர் சாலையில் தனியார் பார் அமைந்துள்ளது. பார் உரிமையாளரின் தம்பி ரமேஷ், மேலாளர் பிரபு ஆகியோர் அங்கிருந்த 200 மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பதற்காக இரண்டு கார்களில் எடுத்துச்சென்றனர்.
அப்போது, வாகன தணிக்கையில் இருந்த ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் அந்த இரண்டு கார்களையும் மடக்கி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த காவல் துறையினர் காரை சோதனை செய்தனர்.
சோதனையில் இரண்டு கார்களிலும் மது பாட்டில்கள் இருந்ததைக் கண்டறிந்தனர். இது குறித்து மதுவிலக்கு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மதுவிலக்கு காவல் துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த 200 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டிகளை மறிமுதல் செய்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்க முயன்ற இரண்டு பேரையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக மது விற்ற 5 பேர் கைது