திண்டுக்கல் அடுத்துள்ள குடைபாறைபட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
விநாயகர் சிலையை கரைத்த காவல்துறையினர் - திண்டுக்கல்லில் பரபரப்பு! - VINAYAKAR, STATUE, TEMPLEFEST, FESTIVAL, CELEBRATION, POOJA, POLICE, ARREST
திண்டுக்கல்: குடைபாறைப்பட்டி அருகே காவல்துறையின் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை, காவல்துறையினரே கரைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனே காவல்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டபோது, அப்பகுதி மக்கள் இந்து மக்கள் முன்னணி சார்பில், காளியம்மன் கோயிலில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பொங்கல் வைத்து பூஜை நடத்திக்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் தடையை மீறி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை கைப்பற்ற முயற்சித்தபோது எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், கைப்பற்றப்பட்ட விநாயகர் சிலை கோட்டை குளத்தில் காவல்துறையினரால் கரைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.