தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Attempt Murder: தாயை அரிவாளால் வெட்டி தீ வைத்த மகன் - ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சிகிச்சை

Attempt Murder: வேடசந்தூர் அருகே இளைஞர் ஒருவர் தனது தாயை அரிவாளால் வெட்டி, தீ வைத்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயை அரிவாளால் வெட்டி தீ வைத்த மகன்
தாயை அரிவாளால் வெட்டி தீ வைத்த மகன்

By

Published : Dec 28, 2021, 7:31 PM IST

திண்டுக்கல்:Attempt Murder: வேடசந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வடமதுரை தென்னம்பட்டி பகுதியிலுள்ள வடக்குத்தெருவைச் சேர்ந்தவர், சுப்பிரமணி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (42).

இவர் தென்னம்பட்டியிலுள்ள அவரது தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த அவரது மகன் சதீஷ்குமார், தனது தாய் பஞ்சவர்ணத்தை அரிவாளால் தலை, கழுத்து, கை பகுதிகளில் வெட்டியுள்ளார்.

அப்போது பஞ்சவர்ணத்தின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அவரது உறவினர்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த பஞ்சவர்ணத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தாயை வெட்டிக் கொல்ல முயற்சித்த மகன் சதீஷ்குமார் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்தது.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வடமதுரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Video In: திருநங்கைக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம்

ABOUT THE AUTHOR

...view details