திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ள தொந்தியா பிள்ளை தெருவைச் சேர்ந்த காமாட்சி (82) என்பவர் மூலச்சந்திரம் பகுதியிலுள்ள அடகுக் கடையில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பணி முடிந்து திண்டுக்கல் வந்த காமாட்சி, பேருந்திலிருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக முதியவர் காமாட்சி மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த காமாட்சிக்கு தலை மற்றும் உடல் பகுதிகள் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. இதற்கிடையே திண்டுக்கல்லில் நாளை முதலமைச்சர் வருகைக்காக பழனி சாலைியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி முதியவரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.