தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரியில் சேர்வதற்காக ஆவலுடன் விண்ணப்பங்களை வாங்கிய மாணவர்கள் - college

திண்டுக்கல்: பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள், கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை கொளுத்தும் வெயிலில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.

கல்லூரியில் சேர்வதற்காக வெயிலில் காத்திருந்த மாணவிகள்!

By

Published : Apr 22, 2019, 11:56 PM IST

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.வி.முத்தையா கல்லூரியில் சேர்வதற்கு திண்டுக்கலைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் இன்று வினியோகிக்கப்பட்டது. இன்று ஒருநாள் மட்டுமே விண்ணப்பம் வினியோகிக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்ததால், இன்று அக்கல்லூரியில் கூட்டம் அலைமோதியது. மேலும் இன்று காலையில் இருந்தே விண்ணப்பங்களைப் பெற மாணவ மாணவிகள் வெயிலில் காத்திருந்து விண்ணப்பங்களைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details