திண்டுக்கல்: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 2022, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் உள்ள சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. வருகிற ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நீச்சல் குளத்தில் மிதந்தவாறு செஸ் விளையாடிய மாணவர்கள் - திண்டுக்கல் மாவட்டத்தின் முன்னெடுப்பு! - Dindigul district
திண்டுக்கல்லில் நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்துகொண்டு செஸ் விளையாடி, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
நீச்சல் குளத்தில் மிதந்தவாறு செஸ் விளையாடிய மாணவர்கள் - திண்டுக்கல் மாவட்டத்தின் முன்னெடுப்பு!
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடியே, 14 செஸ் போர்டுகளில் 28 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு செஸ் விளையாடினர்.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு டிக்கெட் விலை நிர்ணயம்