திண்டுக்கல்:தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் சாலையோரம் பூத்துக் குலுங்கும் இளஞ்சிவப்பு காகித பூக்கள்! - கொடைக்கானல் செய்திகள்
கொடைக்கானல் மலைச் சாலைகள் பூத்துக் குலுங்கும் காகிதப் பூக்களால் இளஞ்சிவப்பு வண்ணமாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், கொடைக்கானல் மலைச்சாலைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் விதவிதவிதமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது, ஏரிசாலை, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, செண்பகனூர், பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இளஞ்சிவப்பு வண்ணக் காகிதப் பூக்கள் பூத்துக்குலுங்கி அந்த இடத்தை வண்ணமயமாக்கியுள்ளன. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், அவை பூத்துக் குலுங்கி வீணாகின்ற. மனிதர்கள் இயற்கையில் இருந்து முரணாகபட்டு நின்றாலும் இயற்கை மனிதனின் கண்களுக்கு விருந்தளித்தே வருகிறது.
இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை