திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே கூலம்பட்டியைச் சேர்ந்த மணி என்பவரது மகன் ரமேஷ்(36). இவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி செந்தாமரைச்செல்வி பாளையங்கோட்டை ஊராட்சி மன்றத்தில் கூலம்பட்டி வார்டு உறுப்பினராக உள்ளார்.
சாலை விபத்தில் உடற்கல்வி ஆசிரியர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல்: செம்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் மீது கார் மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இவர் திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சீவல்சரகு அருகே சுதனாகியபுரம் என்ற இடத்தில் வந்தபோது செம்பட்டி வழியாக திண்டுக்கல் நோக்கி சென்ற கார், ஆசிரியர் ரமேஷ் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ரமேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து செம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.