தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகனை கருணை கொலை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு - etvbharat

நோய்வாய்ப்பட்ட மகனுக்கு வைத்தியம் பார்க்க பணம் இல்லாததால் கருணை கொலை செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்தனர்.

மகனை கருணை கொலை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
மகனை கருணை கொலை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

By

Published : Jul 20, 2021, 1:10 PM IST

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ஆவளிபட்டியை சேர்ந்தவர் செல்வம். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் மனோஜ் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கருணை கொலை செய்யக்கோரி மனு

மனோஜ் நான்காம் வகுப்பு படித்து வரும்பொழுது வலிப்பு நோய் ஏற்பட்டது. இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. சிகிச்சைக்காக செல்வம் தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மகனுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 19) செல்வம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் மகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தால் மகனை கருணை கொலை செய்யவேண்டும் அல்லது இலவசமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 'வழக்கறிஞர் கொலை வழக்கு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கைது'

ABOUT THE AUTHOR

...view details