தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மண்டேலா’ திரைப்படத்தை தடைசெய்யக்கோரி மனு! - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : மண்டேலா திரைப்படத்தை தடைசெய்யக்கோரி மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நத்தம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

’மண்டேலா’ திரைப்படத்தை தடைசெய்யக்கோரி மனு!
’மண்டேலா’ திரைப்படத்தை தடைசெய்யக்கோரி மனு!

By

Published : Apr 16, 2021, 9:34 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக சங்கம் சார்பில் மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி தாசில்தார் விஜயலட்சுமியிடம் புகாரளிக்கப்பட்டது.

அவர்கள் அளித்துள்ள புகாரில், “தமிழ்நாட்டில் மருத்துவ சமூக மக்கள் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். எங்களின் மனதை புண்படுத்தும் வகையில் மண்டேலா திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 04.04.2021 ஞாயிற்றுக்கிழமை, புதுமுக இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா திரைப்படம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலையும், தொழிலாளர்களையும் இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளன.

இதுகுறித்து கதையாசிரியர், இயக்குனர், வெளியீட்டாளர், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details