திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த தென்னம்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சொட்டமாயனூரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் அரசு அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டிருந்துள்ளார்.
இவர் அவ்வழியாக வந்த பள்ளி மாணவியை தனது செல்போனில் அத்துமீறி படம் எடுத்துள்ளார். இதனைக் கண்ட அப்பள்ளி மாணவி உதவிக்காக கூச்சலிட்டுள்ளார். பள்ளி மாணவியின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவியிடம் விசாரித்தனர்.
இதையடுத்து மாணவியின் உறவினர்கள் பாண்டியராஜனை விசாரித்தபோது, அங்கு விரைந்து வந்த பாண்டியராஜனின் சகோதரர் சேரன் ராஜ், தந்தை விசி ராஜேந்திரன், அவரது உறவினரான தர்மர் ஆகியோர் மாணவியின் உறவினர்களை சாதியைச் சொல்லி தரக்குறைவாக திட்டியதாகவும், ஆயுதங்களைக் கொண்டு மிரட்டியதாகவும் தெரிகிறது.