திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகேவுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தை பெரியாரின் சிலையின் மீது சமூக விரோதிகள் சிலர் காவி சாயம் பூசியுள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.