திண்டுக்கல் மாவட்டத்தில் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முருகன், ஜெயசீலன் ஆகியோருக்கு ஆதரவாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முள்ளிப்பாடி அருகேயுள்ள ஆத்துமரத்துப்பட்டியில் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவிற்கு வாக்களித்தால் உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவோம் என்றார்.
உடனே அப்பகுதியினர் அவர் சென்ற வாகனத்தை முற்றுக்கையிட்டு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக கூட அள்ளாடுவதாக குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். இதனையடுத்து அவர்களை சமாதானப்படுத்த முயன்ற வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வேனிலிருந்து கீழே இறங்கிச் சென்று ஊர் மக்கள் மத்தியில் அமர்ந்து குறைகளைக் கேட்கத் தொடங்கினார்.