திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகல் முழுவதும் விடாமல் கனமழையும் அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழையும் பெய்து வருகிறது.
கொடைக்கானலில் பெய்து வரும் மழையால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றுடன் கூடிய மழையால் ஆங்காங்கே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.. மலைச்சாலைகளில் பாறைகளும் சரிந்துள்ளது.