திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அப்பகுதி மக்கள் இரண்டு நாள்களாக அந்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று(ஜூலை 21) அதே தனியார் மருத்துவமனையில் கரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாக தகவல் பரவியது. உடனடியாக அப்பகுதி மக்கள் மருத்துவமனையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள், "குழந்தைகள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் நகரின் மத்திய பகுதியில் கரோனா சிகிச்சை அளித்தால் பிறருக்கு எளிதாக தொற்று பரவும்" என மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.