தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மருந்து உள்ளிட்ட அத்தியவாசிய பொருள்கள் அனைத்தும் கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அரசின் உத்தரவை மீறி பலரும் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தபோது காவல் துறையினர் விதித்த அபராதம், கைது நடவடிக்கை, வழக்குப் பதிவை தொடர்ந்து அச்செயல் நடைபெறுவது குறைந்துள்ளது. தற்போது, சமூக இடைவெளி கடைப்பிடித்தலை காவல் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.