கோடை காலம் நெருங்குவதால், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமான கலையரங்கம் பகுதியில் உள்ள சாலைகளில் அமைக்கப்பட்ட கழிவுநீர் செல்லும் வாய்க்கால் முறையாகப் பராமரிக்கப்படாததால் கழிவுகள், ஆங்காங்கே தேங்கி நின்றுவிடுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
கொடைக்கானலில் கழிவு நீர் தேங்கி மாசுபாடு இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் பொது மக்கள் தெரிவித்தபோதும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி கழிவு நீர் தேக்கத்தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகமும் கொடைக்கானல் நகராட்சி அலுவலர்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கொரோனா வைரஸ் எதிரொலி - பயணிகள் குறைந்ததால் 'சென்னை டூ ஹாங்காங்' விமான சேவைகள் ரத்து!