திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரங்களில் கன மழையும் அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வருகிறது. தொடர் மழையினால் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தாமதம் - விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் பீதி - மண்சரிவு
திண்டுக்கல்: சாலையோரங்களில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில் செண்பகனூர், வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதி, வத்தலகுண்டு பிரதான சாலைகளில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்த பணிகளுக்காக சாலை ஓரங்களில் கற்கள், மணல் கொட்டப்பட்டுள்ளதால் வாகனங்கள் சென்று வர இடையூறாக உள்ளது.
இதனிடையே மழை நேரங்களில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் இரவு நேரங்களிலும் மற்றும் மழை காலங்களிலும் சாலை விபத்து ஏற்படுகிறது. எனவே, தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.